அறிமுகம்
சுனில்கிருஷ்ணன் (ஏப்ரல் 6, 1986) (சுனீல் கிருஷ்ன், சுநீல் கிருஷ்ணன்) தமிழில் சிறுகதைகளும் நாவல்களும் எழுதிவரும் எழுத்தாளர், ஆயுர்வேத மருத்துவர் மற்றும் நவகாந்தியவாதி. இலக்கியத்திற்காக கேந்த்ரிய சாகித்ய அகாதெமியால் வழங்கப்படும் யுவபுரஸ்கார் விருது பெற்றவர்.
விருதுகள்
- 2018-ம் ஆண்டு, எழுத்து கணையாழி அசோகமித்திரன் குறுநாவல் பரிசு – பேசும் பூனை குறுநாவலுக்கு
- 2018-ம் ஆண்டுக்கான இளம் எழுத்தாளர்களுக்கான சாகித்திய அகாதெமி யுவபுரஸ்கார் விருது – அம்புப்படுக்கை சிறுகதை தொகுப்பிற்கு
- 2020-ம் ஆண்டு, க.நா.சு சிறுகதை பரிசு – எப்போதும் முடிவிலே இன்பம் சிறுகதை
சிறுகதைகள்
- அம்புப்படுக்கை (2018)
- விஷக் கிணறு (2020)
நாவல்கள்
- நீலகண்டம் (2020)
தொகை நூல்கள்
- காந்தி எல்லைகளுக்கு அப்பால் – மொழியாக்க கட்டுரைகள் (2012)
- பின்நவீனத்துவவாதியின் மனைவி – சுரேஷ்குமார இந்திரஜித் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (2019)
- காந்தியைச் சுமப்பவர்கள் – காந்தி சிறுகதைகள் (2021)
- Mahathma Gandhi in Tamil – An anthology (2021)
- சியமந்தகம் (ஜெயமோகன் மணிவிழா கட்டுரைகள்) (2022)
அபுனைவுகள்
- அன்புள்ள புல்புல் – காந்திய கட்டுரைகள் (2018)
- வளரொளி – விமர்சனங்கள் நேர்காணல்கள் (2019)
- நாளைய காந்தி – காந்திய கட்டுரைகள் (2021)
- ஆயிரம் காந்திகள் – காந்திய ஆளுமைகள் குறித்த கட்டுரைகள் (2021)
- சமகால சிறுகதைகளின் செல்நெறி ( 2022)
- மரணமின்மை எனும் மானுடக் கனவு ( 2022)
நேர்காணல்
- முதற்கால் – ஆயுர்வேத மருத்துவர் டாக்டர். இல. மகாதேவனுடன் நேர்காணல் (2021)
- வேடிக்கை பார்ப்பவன் – எழுத்தாளர் யுவன் சந்திரசேகருடன் நேர்காணல் (2023)
மொழிபெயர்ப்புகள்
- இந்து ஞானம் ஒரு எளிய அறிமுகம் – க்ஷிதி மோகன்சென்
- சுதந்திரமும் சமூகநீதியும் – ராஜ்மோகன்காந்தி
- மகாத்மாவுக்கு அஞ்சலி – வானொலி அஞ்சலிகள்