ரமணி சந்திரன் தமிழில் புகழ்பெற்ற பெண் எழுத்தாளர்களில் ஒருவர். இவரது நாவல்கள் பொதுவாசிப்புக்குரியவை, பெண்களை இலக்காக்கியவை. உயர்நடுத்தர வாழ்க்கைச் சூழலில், குடும்பச்சிக்கல்களையும் உறவுச்சிக்கல்களையும் இவரது நாவல்கள் பேசுபவை. 150க்கு மேற்பட்ட நாவல்களை இவர் எழுதியுள்ளார்.