Description
Pondichéry: Trilogy of French India என்ற முத்தொகை நூல் 1. அருகன்மேடு: ரேமாவிலிருந்து ரேமாவரை, 2.நல்லபாம்பு: நீல அணங்கின் கதை, 3. ஐந்தவித்தான் என்னும் மூன்று புதினங்களைக் கொண்டது. பொந்திஷேரி என்ற பிரெஞ்சு இந்தியாவின் விடுதலைக்குப் பிறகான பின்காலனிய நிலப்பகுதியின் கதைகளைப் பேசும் இந்நூல் வரலாற்று மனோவியற் புனைவாக விரிகிறது. முடிவற்ற மனவெளி நாடகம் தன்னகத்தே இரண்டாயிரம் ஆண்டுகளைக் கதைவெளியாகக்கொண்டு நிகழ்கிறது. சங்ககாலத்திலிருந்து பிரெஞ்சு காலனியக் காலம்வரை கதை மாந்தர் வரலாற்றில் குறுக்கும் நெடுக்குமாகத் திரிகிறார். சோழமண்ணிலிருந்து ஈழமண்வரை; பொந்திஷேரி துறைமுகத்திலிருந்து பிரெஞ்சு தேசத்து மர்ஸெய் துறைமுகம் வழியாக உள்நிலமேகி பாரிஸ் நகரத் தெருக்கள் வழியாக ஒடும் தமிழ்ப்புலிகள் கண்டம் தண்டிய வரலாற்றுப் பக்கங்களில் சுவடுகளைப் பதிக்கின்றன. கட்டவிழும் மிகையெதார்த்தக் கதைகள், கட்டமையும் புதிய புராணங்கள், கீழைத்தேய மாய அரசியல் நிகழ்வுகள் என விரியும் பின்நவீனத்துவக் கதைக்களத்தின் பனுவல் இன்பம் (pleasure of the text) இங்கு textual sexual pleasure என்றாகிறது. தனித்தனி மூன்று புதினப் பனுவல்கள் இடைக்கழிநாடு என்ற ஒற்றைப் புள்ளியில் தரித்துச் சுழலும்போது பொந்திஷேரி என்னும் நான்காம் பனுவல் வெளிப்படும் மாயம் நிகழ்கிறது. பொந்திஷேரிக்கான தொன்மம் இங்கு மீட்டுருவாக்கப்படவில்லை, மாறாக புதிதாக உருவாக்கப்படுகிறது. Oui, Pondichéry, c’est une ville chocolat avec la mer d’eau de cologne.
Reviews
There are no reviews yet.