லக்ஷ்மி பாலகிருஷ்ணனின் அடுத்த நகர்வு
மானசா
மகாபாரதத்தை ஒரு புராணமாக, ஞான நூலாக அணுகுவோர் உண்டு. அதே நேரம் அதன் தொன்மங்களைத் தொட்டெடுத்து, சுருளவிழ்த்து, அரசியல் பிரதியாகப் புரிந்து கொள்ளவும் இடமுண்டு. இதில் மானசா இரண்டாம் வகையில் வரும் நூல்.
மானசா நாட்டார் தெய்வமாக மாறிய கதை
மானசா அத்தியாயங்கள்
மகாபாரதம் என்றால் அஸ்தினாபுரம், காம்பில்யம், காந்தாரம் என்றுதான் சம்பவங்கள் நடக்க வேண்டுமா என்ன?
அத்தியாயம் - 1
அவ்வனத்தின் அரசரான வாசுகி, எண்ணும் போது எண்ணும் உருவெடுக்க வல்லவர். தேவாதி அசுரர்கள் அமிர்தம் தேடிய போது, வடவரையை மத்தாக்கி, வாசுகியை நாணாக்கித்தான் பாற்கடலைக் கடைந்தார்கள்.
அத்தியாயம் - 2
பல்லாண்டுகளாக இத்தருணத்திற்கெனவே காத்திருந்த வாசுகியோ மிகுந்த மகிழ்வோடு “என் தங்கையின் பெயரும் ஜரத்காருதான். அவளை நான் தங்களுக்கு தானமளிக்கிறேன்.
அத்தியாயம் - 3
தந்தையும் தாயுமென இருந்து என்னை வளர்த்தவர் நீங்கள். நீங்கள் எடுக்கும் எந்தவொரு முடிவும் எனக்கும், நம் நாக குலம் முழுமைக்குமே நன்மை பயப்பதாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன் மூத்தவரே
அத்தியாயம் - 4
சூரியன் தன் ஒளிக் கரங்களால் அவனை தூக்கிக் கொண்டாரா, கால்களற்றுப் போனதை ஈடு செய்ய அந்தக் குழந்தைக்கு பறக்கும் சக்தியை பிரம்மா வழங்கினாரோ தெரியவில்லை...
அத்தியாயம் - 5
கையிலள்ளிய நீர் விரலிடுக்கு வழியே வழிவதை தடுக்கும் வகையறியாது பார்ப்பவள் போல தன்னை மீறி தன்னிலிருந்தே எழுந்த இந்த வார்த்தைகளின் போக்கை அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் கத்ரு.
அத்தியாயம் - 6
எளிய மனிதர்களுக்கு இன்பக் கனவுகளை மட்டுமே கொடுக்கும் மணமாலை சிலருக்கு பல்வேறு பொறுப்புக்களுக்கான சூசகமாக மட்டுமே அமைவதுண்டு.
அத்தியாயம் - 7
வைதீகர்கள் அமர்ந்து சடங்குகளைச் செய்து கொண்டிருந்ததைப் பார்த்து சில முதியவர்கள் மட்டும் குரலெழும்பாமல் உதடசைவாக தங்கள் ஒவ்வாமையை பரிமாறிக் கொண்டிருந்தனர்.
அத்தியாயம் - 8
மனதைக் கட்டுப்படுத்த எந்த முயற்சியும் செய்யாமல் அதன் போக்கில் விடும் போது தானாகவே நெஞ்சின் அலைகள் அடங்கிவிடும் மாயத்தை அறிந்தவள் அவள். எதையும் நோக்காமல், எதிலும் கவனம் குவிக்க முயலாமல்...
அத்தியாயம் - 9
வலிகளுக்கு இடையிலான இடைவெளி குறுகி வருவதை புரிந்து கொண்ட மானசா தன் மகன் இந்த உலகிற்கு வரும் நேரம் நெருங்கிவிட்டதை உணர்ந்தவளாக “நேதளாஆஆஆ” என்று கூவினாள்.
அத்தியாயம் - 10
இப்பிரபஞ்சத்தில் எது மாறினாலும், தான் நிலை மாறாத தன்மையுடன் அங்கே ஒளிர்ந்து கொண்டிருக்கும் நட்சத்திரம் தான் துருவன். அவன் கதையைத்தான் இன்று உனக்குச் சொல்லப் போகிறேன்.
அத்தியாயம் - 11
அதிர்ச்சியாலும், அழுகையாலும் ஏற்பட்ட தளர்ச்சியால் உறக்கத்தில் விழுந்தாலும் துருவனால் நீண்ட நேரம் தூங்க முடியவில்லை. துயிலிலிருந்து எழும்போதே கேள்விகளுடன் எழுந்தவன் அன்னையை ஏறிட்டு நோக்கினான்.
அத்தியாயம் - 12
“கையிலிருக்கும் சோறு சூடாறி, சுவை குன்றுவதற்குள் குழந்தைகளுக்குக் கொடுத்துவிட வேண்டுமல்லவா? வாருங்கள், முதலில் பசியாற்றும் வேலையைப் பார்ப்போம். அதன் பிறகு பழி வாங்குவதைப் பார்க்கலாம்”
அத்தியாயம் - 13
அக்னிக்கு காண்டவவனத்தின் உயிர்த்தொகை ஆகுதியாவதில் உனக்கும் பல லாபங்கள் உண்டு. அந்த இடம் வெட்ட வெளியாகிவிட்டால், அங்கேயே நீங்கள் விரும்பும் வண்ணம் ஒரு மாபெரும் நகரை அமைக்கலாம்.
அத்தியாயம் - 14
“இந்த நாகர்களால் வன மிருகங்களையும் தங்களுக்கு ஏவல் செய்ய வைக்க முடிகிறதென்றால், உண்மையில் அவர்களின் திறம் வியப்பூட்டுகிறது கிருஷ்ணா” என்றான் அர்ஜூனன்.
அத்தியாயம் - 16
துதிக்கை வெட்டப்பட்ட யானைகளும், கொதிக்கும் நீரில் வெந்த நாகர்களும், விடாது துரத்தும் பேருருவ நெருப்பு வளையங்களும் அணிவகுக்கும் கொடுங்கனவுகளால் அச்சம் கொண்டு அலறி எழுந்து...
அத்தியாயம் - 16
“தனியாக பொறுப்புகளைச் சுமக்கும் போது நீரில் நனைத்த பஞ்சென பன்மடங்கு எடை கொண்டுவிடுகிறது. நல்லதொரு துணைவரை அடையப் பெறாத பெண்களுக்கெல்லாம் இத்துயர் தவிர்க்கவியலாத ஒன்று.”
அத்தியாயம் - 17
எதைப் பேச வேண்டுமோ அதை நேரடியாக, சுருக்கமாக, அதே நேரம் பணிவாக சொன்ன ஆஸ்திகனைப் பார்த்து நாநலமுடையவன் இவன் என்று எண்ணிக் கொண்டார் வாசுகி.
அத்தியாயம் - 18
என் மீதான பெருங்கருணையாலும் காணிக்கையை மறுத்தாலும், ஏழ்மை கருதி நான் அதை ஏற்றுக் கொண்டாலும், அதெல்லாம் அறமீறலே ஆகும்.
அத்தியாயம் - 19
அத்தியாயம் - 20
எல்லா விதிகளுக்கும் அவசர காலத்தில் விலக்கு உண்டல்லவா? குரு அன்னை விரத காலத்திற்கு முன்னர் உங்களை எதிர்நோக்கியிருப்பாரே என்பதற்காகச் சொன்னேன்.”
அத்தியாயம் - 21
தயாள குணமும், தர்ம சிந்தனையும் நிறைந்த அந்த அரசி அத்துணை தூரம் அறிவுரைகள் சொல்லியும் தான் அஜாக்கிரதையாக இருந்துவிட்டதை எண்ணிக் நாணினார்.
அத்தியாயம் - 22
பாஞ்சாலத்தரசன் துருபதனின் மகளாகிய திரௌபதியை சுயம்வரத்தில் உன் கொள்ளுப்பாட்டனார் அர்ஜுனன் வென்றார். அவளை ஐந்து சகோதரர்களும் மணந்து பட்டமகிஷியாக்கினர்.
அத்தியாயம் - 23
வஞ்சத்தை தலைமுறை தோறும் கைமாற்றுவதைப் போன்ற மூடத்தனம் வேறில்லை மகனே! தனி மனிதர்களின் பகைக்கு குலங்களையே எரித்தழிப்பது எவ்வகையிலும் அறமன்று.
அத்தியாயம் - 24
நேரம் ஆக ஆக வேள்வியில் நெய்யூற்றவே தேவையில்லாதபடி வந்து விழும் நாகங்களின் உடல் கொழுப்பிலேயே தழல் சுடர்ந்தாடியது. ஊன் வேகும் கொடூரமான மணம் பந்தலைத் தாண்டி தட்சசீல நகர் முழுவதுமே பரவியது.
அத்தியாயம் - 25
இந்த முடிவை இன்றல்ல... நான் அம்முனிவருடன் வாழ்ந்த இல்லம் தீப்பற்றி எரியும்போதே எடுத்துவிட்டேன். இனி முக்கண் முதல்வனை நேரில் கண்டாலன்றி என்னுள் இடைவிடாது எரியும் அந்த அனல் அழியாது.
ஏன் மானசா முக்கிய படைப்பாகிறது
குலப் பகைமை, குலத் தூய்மை போன்ற கருத்தாக்கங்கள் எவ்வளவு அர்த்தமற்றவை என்பதை அன்னையரன்றி வேறு யார் உரக்கச் சொல்ல முடியும்?
மகாபாரதத்தை ஒரு புராணமாக, ஞான நூலாக அணுகுவோர் உண்டு. அதே நேரம் அதன் தொன்மங்களைத் தொட்டெடுத்து, சுருளவிழ்த்து, அரசியல் பிரதியாகப் புரிந்து கொள்ளவும் இடமுண்டு. இதில் மானசா இரண்டாம் வகையில் வரும் நூல். குரு குலத்திற்கும் நாக குலத்திற்குமான தொடர்பை இனப் பகை, இன அழிப்பு, தொடரும் வஞ்சங்கள், பின் ஒரு கட்டத்தில் சமரசம் என்பதாக புரிந்து கொள்வதே இதன் வழிமுறை. இதன் நாயகியான மானசா வங்கம், கலிங்கம், ஆந்திரம் வரையிலான கீழைக் கடற்கரைப் பிரதேச மக்களால் வழிபடப் பெறும் ஒரு நாட்டார் தெய்வம்.
தங்கையாக, மனைவியாக, தாயாக என எல்லா நிலையிலும் தன் கடமைகளைச் சிறப்பாக நிறைவேற்றிவிட்டு, அதற்குப் பின்னர் தனக்கும் தனியான தேடல்கள் உண்டு என்றும், அதை நோக்கிப் பயணிப்பது தன் உரிமை என்றும் பிறருக்கு உணர்த்தியவள் இந்த நாகினி. நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், நிமிர்வும் கொண்ட மானசாவின் கதை இது.
நாக குலங்கள் இங்குள்ள மற்ற இனத்தோடு இரண்டறக் கலந்துவிட்டமையே இந்த வழிபாடுகளின் மூலப்புள்ளி. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நமக்கு தனிப்பட்ட தெய்வங்களாக மானசா என்றோ வாசுகி என்றோ வழிபடும் வழமை இல்லாவிட்டாலும் கூட அரச மரத்தடிகளில் நாகப் பிரதிஷ்டை இல்லாதிருப்பது அபூர்வம். புற்றுக் கோவில்களும், நாகாத்தம்மன்களும் இல்லாத ஊர்கள் கிடையாது.
ஐந்து பேரையும் மணந்து, பாரதத்தின் பேரரசியாக ஆக அவர்களைப் பகடைக்காயாகப் பயன்படுத்தினாள் என்றும் திரௌபதி குறித்து எழுதலாம். இன்னும் முன்னகர்ந்து குந்தியே கூடத் தன் பேராசையால் பிள்ளைகளைத் தூண்டி பாரதப் போரை உருவாக்கினாள் என்றும் எழுதலாம். சுயமான பாலியல் தேர்வு கொண்ட தேவயானி, தமயந்தி, குந்தி, திரௌபதி என அனைவரையுமே பேராசைக்காரர்களாகவும், ஆதிக்க புத்தியுள்ளோராகவும் செதுக்கி வைக்கவும் முடியும். எந்தத் தரப்பிலிருந்து நாம் புனைவுகளை உருவாக்குகிறோம் என்பதை நமது கருத்தியலே முடிவு செய்யும்.
இளம் வயதில் கேட்ட கதைகள் என்பதால் ராமாயணத்தை ராமனின் பக்கமிருந்தும், பாரதத்தை பாண்டவர் பக்கமிருந்தும் மட்டுமே நினைக்கப் பழகியிருந்த மனதிற்கு, மகா ஸ்வேதா தேவியின் ஒரு படைப்பு புராணங்களுக்குள் புதையுண்டிருக்கும் விளிம்பு நிலை மனிதர்களின் மீதான கரிசனமின்மையை உடைத்து முன் வைத்தது. குந்தியும் நிஷாதப் பெண்ணும் என்ற அந்தக் கதை மரபான சூழலில் வளர்ந்து வந்த எனக்கு அளித்த அதிர்ச்சி மிகவும் அதிகம். அடுத்தது இவரது காட்டில் உரிமை எனும் படைப்பு, அது அளித்த பீர்சா முண்டா எனும் தலைவனின் அறிமுகம் என அந்த இளம் வயதில் என்னை மிகவும் பாதித்த எழுத்தாளுமை மகா ஸ்வேதா தேவி.
- சரவணன் மாணிக்க வாசகம். விமர்சகர்
- அ.மார்க்ஸ், செயற்பாட்டாளார்
- அ.மார்க்ஸ், செயற்பாட்டாளார்
நாவலாசிரியர் குறித்து
தற்போது சிறப்புக் கல்வி ஆசிரியராகவும், மனநல ஆலோசகராகவும் இயங்கி வருகிறார்.
லக்ஷ்மி பாலகிருஷ்ணன் சென்னையில் பிறந்து, தஞ்சை மாவட்டம் பாபநசத்தில் வளர்ந்தவர். மென்பொருள் துறையில் பணி புரிந்தவர். தற்போது சிறப்புக் கல்வி ஆசிரியராகவும், மனநல ஆலோசகராகவும் இயங்கி வருகிறார். கல்லூரி காலம் முதலே, கவிதை, சிறுகதை, கட்டுரை என பல தளங்களில் இயங்கி வருபவர். சிறப்புக் குழந்தையை (ஆட்டிசம்) வளர்ப்பதன் அனுபவத்தை ‘எழுதாப்பயணம்’ எனும் நூலாக எழுதி வெளியிட்டிருக்கிறார். தொடர்ந்து ‘ஆனந்தவல்லி’ எனும் வரலாற்றுப் புதினத்தையும் எழுதியுள்ளார். ‘நெல்விளைந்த கதை’ ‘எழுத்துப்பிழை’ ஆகிய சிறார் நூல்களையும் எழுதி வெளியிட்டிருக்கிறார்.
சிறந்த நாவல் விருது
இவர் எழுதிய ஆனந்தவல்லி நாவல் 2022ஆம் ஆண்டு புதுக்கோட்டை புத்தகக் கண்காட்சியில் சிறந்த நாவலுக்கான விருது பெற்றுள்ளாது.
இன்குலாப் நினைவு விருது
ஆனந்தவல்லி நாவல், தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை வழங்கும் மக்கள்கவி இன்குலாப் நினைவு படைப்பாக்க மேன்மை விருதினையும் பெற்றுள்ளது
எழுதாப் பயணம்
சிறப்புக் குழந்தை வளர்ப்பு குறித்தான தனது அனுபவங்களான எழுதாப் பயணம் புத்தகம் ஆயிரக்கணக்கான பெற்றோர்களிடம் ஏற்படுத்திய விழிப்புணர்வுகள் ஒரு பெரும் சாதனை.
Book Pick has everything if you want to buy Books online!
Buy books with 10% – 25% Offer
FREE SHIPPING & RETURN
Free shipping on all orders over Rs.1000
MONEY BACK GUARANTEE
100% money back guarantee
ONLINE SUPPORT 24/7
Lorem ipsum dolor sit amet.