Description
கன்னட இலக்கிய உலகில், மரியாதைக்குரிய ஒரு இலக்கியவாதி, யு.ஆர்.அனந்த மூர்த்தி. ஞானபீடம் உள்ளிட்ட, பல பெரிய இலக்கிய அமைப்புகளிடமிருந்து விருதுகளும், பரிசுகளும் பெற்றவர். இவருடைய சமஸ்கர, பாரதிபுர என்ற இரண்டு புதினங்களும், இந்திய மற்றும் சர்வதேச மொழிகளில் மாற்றம் பெற்றுள்ளன. இவருடைய, “அவஸ்தை என்ற நாவலை நஞ்சுண்டன் மொழி பெயர்ப்பில் காலச்சுவடு, கிளாசிக் நாவல் வரிசை வெளியீடாக வந்துள்ளது. இதற்கு முன்னரே, வேறு ஒரு தமிழ் எழுத்தாளரின் மொழிபெயர்ப்பில், வேறு ஒரு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. கிருஷ்ணப்பா என்ற கிராமப்புற விவசாயியின், 50 ஆண்டு வாழ்க்கை அனுபவத்தைச் சொல்லும் நாவல். மாடு மேய்க்கும் அந்த கிராமத்துச் சிறுவன், அருகில் உள்ள நகரில், பள்ளி, கல்லு<õரியில் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெறுகிறான். இங்கு சமூக அரசியல் சார்ந்து கவனம் திரும்புகிறது. வாலிப வயதில் வழக்கம் போல, இவன் மீது, ஒரு பெண்ணுக்கு ஆசையும், இவனுக்கு காம பசிக்கு ஒருத்தி விருந்து படைக்கிறாள். மற்றொருத்தியும் முன் வரும்போது இந்த,”வைராக்கிய பேர்வழி மறுத்துவிடுகிறான். அரசியல் அனுபவங்கள் வழக்கம் போல, அடிதடி, அடிவெட்டு, பதவிபறிப்பு என்று பயன்படுத்துகிறது. மிகவும் நேர்மையான இடதுசாரி அரசியல்வாதியாக பரிணமிக்க எடுக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன. இந்த நாவலில் மஹேஸ்வரய்யா வீரண்ணா அண்ணாஜி, ஜோயீஸ், நாகேஷ், பைராகி, அனுமந்தய்யா என, பல ஆண் கதாபாத்திரங்கள். லூசினா, ஜோதி, சீதா தேஷ்பாண்டே என, பல வித்தியாசமான குண இயல்புகளுடன் கூடிய கதாபாத்திரங்கள்.மூன்று பாகங்களைக் கொண்ட இந்த நாவலின், இரண்டாம் பாகத்தில் போலீஸ் அராஜகம், சித்ரவதை பற்றிய பகுதிகள், கொடுமைகள், கொடூரங்கள், அராஜகங்கள் என, போலீசைப்போட்டு கிழி கிழி என, கிழித்திருக்கிறார் நாவலாசிரியர். நெஞ்சை உறைய வைக்கும் பகுதி இது. திரைப்படம் ஆக்கப்பட்ட படுதோல்வி அடைந்த இந்த நாவல், இலக்கிய, வாசகனின் வாசிப்பு அனுபவத்தில், சிலிர்ப்பையும், அதிர்வையும் ஏற்படுத்தும்.
Avasthe (Kannada: ಅವಸ್ಥೆ) என்ற பெயரில் இந்நாவலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படத்தை கன்னட திரைப்பட இயக்குனர் கிருஷ்ண மாசாதி இயக்கியுள்ளார்.
Reviews
There are no reviews yet.