Description
ஜலமோகினி
நமது தாய் நாட்டுக்குப் பேராபத்து நேர்ந்து மக்கள் அவதிப்படும் காலங்களிலெல்லாம், ஒரு மகாவீரன் இந்த நாட்டு மண்ணில் தோன்றி அந்த ஆபத்தைத் தடுத்து நிறுத்தி மக்களுக்கு மனச் சாந்தியை அளிப்பது பாரதத்தின் சரித்திரம் கண்ட உண்மை . அத்தகைய ஒரு மகாவீரன் கி.பி. பதினேழாவது நூற்றாண்டில் மகாராஷ்டிர வகுப்பில் பிறந்தான். அவன் பெயர் கனோஜி ஆங்கரே.அவன் பிறந்த காலம் இந்திய சரித்திரத்தில் மிக நெருக் கடியான காலம். போர்ச்சுக்கீஸியரும், டச்சுக்காரரும், ஆங்கிலே யரும் கடல் மார்க்கமாகப் பாரதத்துக்கு வந்து பாரதத் தாயின் கால்களில் மெள்ள மெள்ள அடிமைத் தளைகளைப் பூட்டத் தொடங்கிய காலம். ஆகவே கடல் மார்க்கம் கொந்தளித்து நின்று சதா கடல் போர்கள் நிகழ்ந்தன. போதாக்குறைக்கு ஆப்பிரிக்காவிலிருந்து வந்து இந்தியாவின் மேற்குக் கடற்கரை யோரத்தில் குடியேறிய அபிஸீனியக் கடற் கொள்ளைக்காரர் களின் ஆர்ப்பாட்டம் அதிகமாயிருந்தது. ஹிந்துக்களுடைய கப்பல்கள் அரபிக் கடலில் நடமாட முடியவில்லை . நடமாடிய கப்பல்கள் சூறையாடப்பட்டன. பெண்கள் அபகரித்துச் செல்லப் பட்டார்கள். அரபிக் கடல் பிராந்தியம் ஒரு பயங்கரப் பிர தேசமாக மாறியது. இந்தச் சமயத்தில்தான் கனோஜி ஆங்கரே என்ற மகாராஷ்டிர மாலுமி தோன்றினான்.அவன் வளர்ந்து மரக்கலம் ஏறி மாலுமியாகிய சில வருடங்களில் அரபிக் கடல் நிலை அடியோடு மாறியது. கனோஜி ஆங்கரே என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்தில் அபிஸீனியக் கொள்ளைக்காரர்கள் நடுங்கினார்கள். அடிமைத் தளை பூட்ட வந்த ஐரோப்பியர் நடுங்கினார்கள். 17 வது நூற் றாண்டின் இறுதியிலிருந்து 18 வது நூற்றாண்டு ஆரம்பமான பல வருஷங்கள் வரை அரபிக் கடல் பிராந்தியத்தில் கனோஜி ஆங்கரே தனியரசு செலுத்தினான் என்பதை கிங்கெய்ட் போன்ற பிரபல ஆங்கிலச் சரித்திர ஆசிரியர்களே ஒப்புக் கொள்ளுகிறார்கள்.
Reviews
There are no reviews yet.