Description
மீ – உலக விஞ்ஞான புனைவுப் புத்தகம்
தொகுப்பாசிரியர் : பிரவீண் பஃறுளி
அறிவார்த்தமும் கனவுநிலையும் மயங்கும் வினோத ரசத்தின் மீ..யதார்த்த, மீ..மனித, மீ ..ஞாபக, மீ..ஜீவித, மீ..யுலக உலக விஞ்ஞான மாயரூபப் புனைவின்
மகா ஆசான்கள் – பதினெண்மரின் -33 கதைகள்.
17 மொழிபெயர்ப்பாளர்கள். 1757 முதல் 2020 வரை கால வரிசையில் தொகுக்கப்பட்ட கதைகள்.
700 பக்கங்கள் – மென்னட்டை / கெட்டியட்டை என இரு பதிப்புகளில் நூலின் விலை :கெட்டி அட்டை : ₹1200/- (முன்பதிவில் ₹1000/-) பேப்பர் பாக் :₹880/-
விநோதங்களும் மாயங்களும் நிரம்பிய நாமறியாத பேரண்டப் பெருவெளியின் அசாத்தியங்களின கனவுப் பாதையில் சிருஷ்டிப்பின் மகத்துவ கண்கொண்டு அலையும் உலகளாவிய விஞ்ஞானப் புனைவு புத்தகமாக விரிந்துள்ள இந்நூல் இன்னொரு வகையில மனித யத்தனங்களுக்கு மீறிய அசேதன உயிர்ப்பரப்பின் கனவு புத்தகமாக மலர்ந்துள்ளது.
காண்பதற்கும் காணப்படாததிற்கும் அறிவுக்கும் அறியாமைக்கும் நடுவே மாபெரும் புனைவின் எழுத்தை கோர்த்தெடுத்துள்ள உலக விஞ்ஞான புனைகதைப் படைப்பாளிகள், மனித அறிவின் விசாலத்தைத் தாண்டி கிரகங்களின் அறியவொண்ணா வியப்புகளைப் பின்தொடர்ந்து தாவர ஜீவ ஜந்துக்களிலிருந்தும் நித்யகாலமும் அளக்கவியலா கோள்களின் மகா சிருஷ்டிப்பின் எண்ணிலடங்கா படைப்புத் துளிகளிலிருந்தும் துகள்களின் நுண் துகள்களிலிருந்தும் இக்கதைகளை காணாப் புதையலென கண்டெடுத்துள்ளனர்.
பிரவீண் பஃறுளியின் தொகுப்பாக்கத்தில் தமிழின் தலைசிறந்த மொழிபெயர்ப்பாளர்களின் பேராழமும் நுண்விரிவும் கூடிய மொழியாக்கத்தில் உலக விஞ்ஞானப் புனைவு புத்தகம் தனது விசித்திர விநோத மாய கனவுப் பக்கங்களை தமிழ் வாசகர்களுக்குப் படிக்கத் திறக்கிறது.
– பாலை நிலவன் (முன்னுரையிலிருந்து)
Reviews
There are no reviews yet.