Description
தமது திருமண உறவு சிதைந்துபோன நிலையில்,
ஒரு சீன எழுத்தாளர் திபெத் நாட்டுக்குப் பயணம் செல்கிறார். அங்கே இருக்கும் கிராமப்புறங்களில் அலைந்து திரிந்துகொண்டிருக்கும் வேளையில் அவருக்கு,
ஒரு விண்ணடக்கத்தை நேரில் பார்க்கும்
வாய்ப்புக் கிட்டுகிறது;
தன்னுடைய மகளோடு படுத்துறங்கிய பாவத்திற்குப்
பரிகாரம் தேடுவதற்காக யாத்திரை சென்றுகொண்டிருக்கும்
ஒரு நாடோடியோடு கூடாரத்தைப் பகிர்ந்துகொண்டு,
தங்க நேர்கிறது;
காற்றால் உலர்ந்துபோன தன்னுடைய காதலியின் உடலைக் குகை போன்ற குடியிருப்பின் சுவரில் தொங்கவிட்டிருக்கும்
ஒரு வெள்ளி ஆசாரியைச் சந்திக்க வாய்க்கிறது;
பௌத்தமத தீட்சை பெறும் சடங்கின் போது உயிர்விட்ட வாழும் புத்தரின் மறுபிறவியான ஒரு பெண்ணைப் பற்றிய கதையைக் கேட்கும் வாய்ப்பும் கிடைக்கிறது.
திபெத் எனும் காற்றழுத்தம் குறைந்த உயர்ந்த பீடபூமியில் நடக்கும் இந்த நிகழ்வுகள், உண்மைக்கும் புனைவுக்குமான வேறுபாட்டைப் பிரித்தறிய முடியாமல் நம்மைத் திணற வைக்கிறது. இதன் மூலம் அந்த எழுத்தாளர் ஓர் அயல் கலாச்சாரத்தால் அதன் ஆழத்துக்கு இழுபட்டுச் செல்கிறார்; அது அவருடைய கனவுகளிலும் துன்புறுத்துகிறது. இதுவே படைப்பின் வெற்றியாகவும் அமைந்துவிடுகிறது.
***
1987ஆம் ஆண்டு சீனாவில் தடைசெய்யப்பட்ட புகழ்பெற்ற ‘நாக்கை நீட்டு’ எனும் இந்தக் கதைப் புத்தகம், நூலாசிரியர் மா ஜியான் நாடு கடத்தப்படுவதற்கும் அவருடைய படைப்புகளைச் சீனாவில் வெளியிட தடைகளை நீடிக்க வைப்பதற்கும் இன்றும் காரணமாக இருக்கிறது.
Reviews
There are no reviews yet.