Description
The Godfather படத்தில் அவர் எடுத்திருந்த முடிவு திகைப்பில் ஆழ்த்தியது. “தேவைப்பட்டால் மட்டும் நடிகர்களின் கண்களைக் காட்டினால் போதுமானது. கதாபாத்திரத்தின் தலைக்குள் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பது தான் முக்கியம்”. இந்த ஒளிப்பதிவு சிந்தனையை இன்றளவும் உலகம் கொண்டாடுகிறது – கார்டன் வில்லிஸ்
ஒரு வண்ணம் நமக்குள் நிகழ்த்துவது என்ன? கறுப்பு வெள்ளை , வண்ணப்படங்களுக்கான வேறுபாட்டினை எப்படிக் கையாள்வது? – கான்ராட் ஹால்
ஒளிப்பதிவாளர்களைப் பொறுத்தவரை இயக்குநருடனான அவரது உரையாடலே அந்தப்படத்தின் தரத்தினைத் தீர்மானிக்கிறது எனலாம் என்பது வில்மஸ் ஜிக்மான்ட் தனது அனுபவத்தின் வழி சொல்வது. ஒரு இயக்குநருடன் எப்படி நல்ல உறவினைப் பேணுவது என்பதையும் பகிர்ந்திருக்கிறார்.
வண்ணங்களைப் பற்றி ஆழ்ந்தத் தேடலைக் கொண்டிருக்கும் விட்டோரியோ ஸ்டோரரோ வண்ணங்களைக் குறியீடாக பயன்படுத்தும் வித்தையினைக் கற்றுத் தந்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளருக்கு உள்ள சிக்கல்கள் நேர மேலாண்மையும், படத்தின் பட்ஜெட்டினை உட்படுத்தி விரும்பிய தரத்தினைத் திரையில் கொண்டு வருவதும். திட்டமிடல் இருந்தால் இதனை சாத்தியப்படுத்தலாம் என்பதோடு அதற்கான வழிமுறைகளையும் கற்றுத் தந்திருக்கிறார் பில் ஃப்ரேகர். புதுமுக இயக்குநர்களோடு தொடர்ந்து பணி செய்த அனுபவங்கள் கொண்டதால் இது எளிதில் அவருக்கு வசமாயிருக்கிறது.
ஹாஸ்கெல் வெக்ஸ்லர் ஆவணப்பட ஒளிப்பதிவாளராக இருந்தவர். ஒரு திரைப்படத்தை எப்படி உள்ளதைக் கொண்டு சிறந்தத் தரத்துக்குத் தர முடியும் என்பதை உதாரணங்களோடு விளக்குகிறார்.
ஒரு வார்த்தை கூட ஆங்கிலம் தெரியாது ஹங்கேரியிலிருந்து அமெரிக்கா வந்தடைந்து ஹாலிவுட்டின் சிறந்த ஒளிப்பதிவாளரானது அவரே சொல்வது போல நம்ப முடியாத சாகசப் பயணமே. அந்தப் பயணத்தில் அவர் மேற்கொண்ட ஒளிப்பதிவு முயற்சிகளை எடுத்து சொல்லுகிறார் லாஸ்லோ கோவாட்ச்.
இந்த நேர்காணல்களைப் படிக்கிறபோது நமக்குள் எழுகிற உத்வேகத்துக்குப் பெயர் நம்பிக்கையன்றி வேறென்ன?
Reviews
There are no reviews yet.