Description
தீண்டாமை வழக்கத்திலிருப்பதைப் பற்றி வெளிநாட்டவர்களுக்கு நிச்சயமாகத் தெரியும். ஆனால் வெகுதொலைவில் வாழும் அவர்களுக்கு யதார்த்தத்தில், இது எவ்வளவு கொடூரமானது என்பதை உணரமுடிவதில்லை. அதிக எண்ணிக்கையில் இந்துக்கள் வாழும் ஒரு கிராமத்தின் ஓரப்பகுதியிலே குடியிருக்கும் சில தீண்டத்தகாதவர்கள், தினந்தோறும் அந்த கிராமத்தின் மிக அருவருக்கத்தக்க கழிவுகளை அப்புறப்படுத்துவதையும், பலதரப்பட்டவர்களுக்கும் எடுபிடி வேலைகள் செய்வதையும், இந்துக்களின் வீட்டு வாசல்களில் நின்று உணவு பெற்றுக் கொள்வதையும், இந்து பனியாக்களின் கடைகளில் தூரத்தில் நின்று கொண்டு மளிகை சாமான்கள் மற்றும் எண்ணெய் வாங்குவதையும், அந்தக் கிராமத்தைச் சேர்ந்த எவரையும் தீண்டாமலும் யாராலும் தீண்டப்படாமலும் இருப்பதையும், இருப்பினும் அந்தக் கிராமத்தை எல்லாவிதத்திலும் தங்களது சொந்த ஊராகக் கருதி எப்படி வாழ முடியும் என்பதையும் வெளி நாட்டவர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை. சாதி இந்துக்களால், தீண்டத்தகாதவர்கள் நடத்தப்படும் விதத்தைப் பற்றிய சித்திரத்தை எப்படிச் சிறப்பாக அளிப்பது என்பதே பிரச்சினை. அவர்கள் நடத்தப்படும் விதத்தைப் பற்றிய பொதுவான விளக்கம் அல்லது சம்பவக் குறிப்புகளை அளிப்பது என்ற இரு முறைகளால் இந்த விருப்பத்தை நிறைவேற்ற முடியும்; முதலில் குறிப்பிட்டதை விட பின்னால் குறிப்பிட்டதே மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறேன். என் அனுபவத்திலிருந்து எடுக்கப்பட்ட சில நிகழ்ச்சிகளையும், பிறரது வாழ்க்கையில் ஏற்பட்ட நிகழ்ச்சிகளையும் இதற்காகத் தேர்ந்தெடுத்துள்ளேன். என் சொந்த வாழ்க்கையில் நேர்ந்த சில நிகழ்ச்சிகளிலிருந்து ஆரம்பிக்கிறேன்.
Reviews
There are no reviews yet.