Description
இந்த புத்தகத்தில் 2 நாவல்கள்.
1.பேய்க்கரும்பு
2.பொன்வட்டில்
பேய்க்கரும்பு :-
எழுத்தாளர் பாலகுமாரன் தனது நடையில் திருவெண்காடர் செய்த வியாபாரத்தைச் சொல்லுகிறார். அவருக்கு இறைவன் தந்த மகனாக வந்த மருதவாணன் “ காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என்று அறிவுறுத்தி மறைய ” பட்டினத்தார் என்ற துறவியாக மாறுகிறார். எழுத்தாளர் பாலகுமாரன் இந்த வரலாற்றினை அப்படியே ஒரு கதையாகச் சொல்லுகிறார். “ நாம் உயிரோடு இருப்போம் என்கிற போதுதான் கோபமும் ஆத்திரமும் போட்டியும் பொறாமையும். செத்துப் போய் விடுவோம் என்கிறபோது , உள்ளுக்குள் சட்டென்று ஒரு அமைதி வந்து விடுகிறது.” “ கோயில் கோயிலாக சுற்றினாலும் கோயிலுக்குள் உள்ள ஈசனை நோக்கிப் பாடினாலும், பட்டினத்தாரின் கடவுள் கொள்கை வேறுவிதமாக இருந்தது. ஆகம விதிகளும், சாஸ்திர சம்பிரதாயங்களும் வெறும் சடங்குகளும் இறைவனைக் காட்டாது என்பதை அவர் மக்களுக்குத் தெளிவாக எடுத்துச் சொன்னார்”
திருவொற்றியூர் கடற்கரைப் பக்கம் இப்போதும் பட்டினத்தார் சமாதி இருக்கிறது. குடிசைகளுக்கு நடுவே அமைதியாய், ஆனந்தமாய், உயர்வற வாழ்ந்து, அதனினும் உச்சியின் துறவறத்தை முழுமையாய் பூண்டு இறைவன் பாதத்தில் கலந்து நின்ற அந்தப் பெரியோரின் சமாதி இப்போதும் பார்க்க முடியும்.
சென்னைக்கு வந்தால்,திருவொற்றியூர் கடற்கரை பக்கம் இருக்கின்ற பட்டினத்தார் சமாதியைப் பொய் கும்பிட்டுவிட்டு வாருங்கள்.
வாழ்க்கையின் நிலையாமையை பட்டினத்தார் சொன்னது போல, சுவைப்படச் சொன்னவர் மிகக் குறைவு.
செல்வம்,பெண், புகழ், இவையெல்லாம் அற்புதமாகத் தோன்றுகின்ற காலகட்டம் மறைந்து, இவைகளில் எந்த லாபமுமில்லை என்று புரிகின்ற ஒரு காலம் ஒவ்வொரு மனிதனுக்கும் நிச்சயம் வரும். இளமையிலேயே புரிந்து கொண்டு, இறைவனோடு கலந்து வெறுமே வாழ்ந்து போகின்ற சுகத்தை பட்டினத்தார் போல மிகச் சிலரே அடைவார்கள்.
உலகம் இருக்கும் வரை,
பட்டினத்தார் பெயரும் அவர் பாடல்களும் இருக்கும்.
பொன்வட்டில் :-
திருவரங்கம் சுற்றியுள்ள எல்லா இடங்களிலும் விப்பர நாராயணருடைய புகழ் பரவியது. இறைவழிப்பாட்டின் உச்சநிலைக்கு போக விரும்புபவர் இந்தச் சூழ்நிலையில் சிக்கக் கூடாது.
விப்பர நாராயணர் என்கிற ஆற்றல் மிகுந்த அந்த பக்தனை இன்னும் உயர்த்துவதற்கு இறைவன் திருவுள்ளம் கொண்டான்.
யாரது?
-தேவதேவி.
அவள் பொன்வட்டில் கேட்டாள் என்பது என்ன நிச்சயம்?
-அவள் எது வேண்டுமானாலும் கேட்பாள். அப்படிப்பட்ட பெண்.
அப்படியா? அதையும் விசாரித்து விடுவோம்
-விப்பர நாராயணரை கூட்டி வரட்டுமா?
வேண்டாம். தேவதேவிக்கு ஆளனுப்பி விசாரியுங்கள்.
Reviews
There are no reviews yet.