Description
அமரர் கல்கி பற்றியோ, அவரின் எழுத்தாற்றல் பற்றியோ தமிழ்கூறும் நல்லுலகுக்கு புதிதாகச் சொல்வதற்கு எதுவுமில்லை. அவருடைய படைப்பின் மகிமை அத்தகையது. அவரின் சரித்திரக் காப்பியங்களான பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் போன்றவை காலத்தால் அழியாத காவியங்களாக போற்றப்படுபவை. இன்னும் எத்தனை நூறாண்டு காலத்துக்குப் பிறகு அவற்றை எடுத்துப் படித்தாலும், அமரர் கல்கியின் மயக்கும் நடையும், எளிமையும் இனிமையும் நிரம்பிய தமிழும், கதையின் வசீகரப் போக்கும் ஓர் இனிய சுழலுக்குள் நம்மை இழுத்துப் போவதை உணரலாம். சரித்திரத்தையும் கற்பனையையும் மிகத் திறமையாகக் குழைத்து அமரர் கல்கி படைத்திருக்கும் புதினமான ‘பொன்னியின் செல்வன்’, தமிழ் வாசகர்களுக்குக் கிடைத்த ஓர் இலக்கிய வரம் என்றே சொல்லலாம். பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய சரித்திரக் காட்சிகளை – அவற்றுக்கான அடிப்படை ஆதாரங்களை அச்சு பிசகாமல் உள்வாங்கிக் கொண்டு & அருகில் இருந்தே பார்த்தது போல நுணுக்கமாக அவர் விவரித்திருக்கும் நேர்த்தியை என்னவென்று சொல்ல! சுந்தரச் சோழர், அருள்மொழி வர்மன், ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவன், செம்பியன்மாதேவி, குந்தவை, வானதி, நந்தினி, ஆழ்வார்க்கடியான், பழுவேட்டரையர் என வரிசையாக ஒவ்வொருவரும் உயிர்பெற்று நம் முன் நடமாடத் துவங்குகிறார்கள். அன்றைய சோழ தேசத்தில் நிலவிய ராஜாங்கப் பிரச்னைகள், வகுக்கப்பட்ட யுத்த வியூகங்கள், தீட்டப்பட்ட சதியாலோசனைகள் ஆகியவை ஒரு மர்ம நாவலுக்குரிய அத்தனை படபடப்பையும் ஏற்படுத்தி விடுகிறது. இதில் எவையெல்லாம் நிஜ சரித்திரம், எவையெல்லாம் சரித்திரத்தின் நீட்சியாக உருவாக்கப்பட்ட கற்பனைச் சம்பவங்கள் எனப் பிரித்தறிய முடியாதபடி பின்னிப் பிணைந்து இருப்பது, அமரர் கல்கியின் ஜீவிய எழுத்துத் திறனுக்குச் சான்று! ஒலியும் ஒளியும் போல…
Reviews
There are no reviews yet.