Description
வாண்டு மாமா 100
நாகர்கோயில் பிரசார சபையார் வெளியீட்ட “பாலதீபிகை’தான் தமிழின் முதல் சிறுவர் பத்திரிகை. 1840-ஆம் ஆண்டு முதல், மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாக வெளிவந்த இப்பத்திரிகை சுமார் பதின்மூன்று ஆண்டுகள் தொடர்ந்து வெளிவந்தது. இதன் பின்னர் 1849-ஆம் ஆண்டு பாளையங்கோட்டை பிரசார சபையினர் வெளியிட்ட “சிறு பிள்ளையின் நேச தோழன்” என்ற சிறுவர் பத்திரிகையும் 1859-ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து “வெளியான பாலியர் நேசன்” என்ற இதழமே தமிழின் முதல் மூன்று சிறுவர் பத்திரிக்கை வெளியீடுகள் என்பது வரலாறு.
தமிழ் சிறுவர் இலக்கியம், தமிழ் சிறுவர் பத்திரிகைகள்,வரலாறு என்ற சொற்றொடர்களைக் கொண்டு ஒரு வாக்கியம் அமைக்கப்படும்போது, அதில் தானே வந்துசேரும் ஒரு வார்த்தை – வாண்டுமாமா.
கடந்த எழுபது ஆண்டுகளில் தமிழில் சிறுவர்களுக்காக எழுதிய சிறப்பான ஆல்-ரவுண்ட் கமர்ஷியல் எழுத்தாளர் அதாவது அனைத்து விஷயங்களைப் பற்றியும் யாருக்கும் சவிப்பு வராமல், தெளிவாக எழுதக்கூடிய திறன் பெற்ற ஒருவர் இருந்தார். அதுவும் தமிழகத்திலேயே ஆனால், அவர் தன்னுடைய தளத்தை (Domain) சிறுவர்களுக்கென்று அர்ப்பணிப்பு செய்துகொண்ட காரணத்தினாலேயே மற்ற எழுத்தாளர்கள் அளவுக்கு அவர் புகழும் (பொருளும்கூட), பெயரையும் பெறவில்லை.
வாண்டுமாமா என்று கடந்த 68 ஆண்டுகளாக அறியப்பட்ட திரு வி. கிருஷ்ணமூர்த்தி அவர்கள்தான் தமிழ் சிறுவர் இலக்கியத்தின் தலைமகனாவார்.தமிழிசிறுவர்களுக்கென்று தனிப்பட்ட முறையில் நேரமொதுக்கி எழுதியவர்கள் விகாரம் குறைவே. அப்படிப்பட்டவர்களில் முதன்மையானவர் வாண்டுமாமா இவரை சிறுவர் இலக்கிய சிந்தனைச் சிற்பி என்று சொல்வது பொருத்தமான ஒன்றே.
வாண்டுமாமாவின் சிறப்பு: படிப்பவர்களை சுண்டி இழுக்கும் வசீகரம் கொண்டது வாண்டுமாமா அவர்களின் எழுத்து நடை. சூரியனுக்கு கீழே உள்ள எதைப் பற்றியும் சுவாரஸ்யமாக எழுதிப் படிக்கும்படியாகச் செய்தவர் அவர். விஞ்ஞானம் என்றாலே காத தூரம் ஓடிக்கொண்டிருந்த பலரையும் விஞ்ஞான சம்பவங்களை ரசித்துப் படிக்க வைத்தவர் அவர். இவர் எழுதிய உலோகங்களின் கதை, நகரங்களின் கதை தோன்றியது எப்படி நாகரிகங்கள் உருவான வரலாறு போன்ற பல புத்தகங்கள் பாடப் புத்தகங்களை எளிமையாக மாணவர்களுக்குப் போதித்தன.
மற்றவர்கள் அனைவருமே படைப்பாளிகளாக, ஒளியர்களாக. எடிட்டர்களாக தனித்திறமையுடன் செயல்பட்டபோது, தனது வாழ்நாள் முழுவதிலும் சிறுவர் இலக்கியத்திற்காக தன்னை அர்ப்பணித்த அம்மாமனிதர் ஓர் ஆல்-ரவுண்டராக ஒளிவீசினார். பல சமயங்களில் பூந்தளிர், கோகுலம் இதழ்களில் முன் அட்டை முதல் பின் அட்டை வரை அனைத்தும் அவரது கைவண்ணத்தில் கௌசிகன், வாண்டுமா, கிட்டு, வி.கே.எம், சாந்தா மூர்த்தி என்று மெருகூத்தப்பத்தவையே.
கிங் விஸ்வா
ஆசிரியரின் பிற நூல்கள்:
சிறுவர்களுக்கான உலகப் புத்தக அலமாரி
தமிழ் சிறுவர் இலக்கியம்-அறிந்து கொள்ளவேண்டிய ஆளுமைகள் பாகம்-1
சித்திரமும் சரித்திரமும் – காமிக்ஸ் உலகின் திருப்புமுனைகள்
தலைசிறந்த இந்திய கிராஃபிக் நாவல்கள் பாகம்-1
ஜப்பானிய மங்கா காமிக்ஸ் – அறிமுகமும் ஆளுமைகளும்
கிராஃபிக் நாவல் – அறிந்து கொள்ள வேண்டிய ஆளுமைகள் பாகம் – 1
தலைசிறந்த கிராஃபிக் நாவல்கள் பாகம்-1
Reviews
There are no reviews yet.