Description
அதில் இவன்தான் தலைவன் போல் பேசினான். பெண்களை மட்டமாக நினைத்துப் பேசினான்.
அப்போது சாந்தனா… அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவனும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அப்பா! எத்தனை முரட்டு ஆசாமி. உடம்பைப் போலவே மனசும், பேச்சும் என்று நினைத்தாள்.
பிறகு அதை அவள் மறந்தே போனாள். இது நடந்து ஒரு மாதம் இருக்கும். இவள் அன்று வெள்ளிக்கிழமை கோயிலுக்குப் போய்ட்டு வரலாம் என்று, தானே காரை எடுத்துக் கொண்டு போனாள்.
சாமி கும்பிட்டு வந்து வீட்டுக்குக் காரை எடுத்துக் கொண்டு போனாள். ஒரு திருப்பத்தில் ஒரு கார் நின்றது. இவளும் காரை நிறுத்தும்படி ஆனது. ஹாரன் அடித்துப் பார்த்தாள். அவன் எடுக்கிற மாதிரியில்லை. இவள் கீழே இறங்கி வந்து, அந்தக் காருக்குப் பக்கத்தில் போய், என்ன இது? இப்படி வழியில் காரை நிறுத்தி விட்டீங்க… நான் எப்படிப் போவது?’ என்று கேட்டு வாய் மூடு முன், ஒருவன் கார் கதவைத் திறந்து அவள் முகத்தில் கர்ச்சீப் வைத்து அழுத்தினான்.
அவ்வளவுதான் அவளுக்குத் தெரியும். ஒருவன் உடம்புக்காக இப்படிச் செய்வானா?
மாலை வந்து கதவைத் திறந்து கொண்டு வந்தான். வந்தவன் லைட் கூடப் போடாமல் இருப்பதைப் பார்த்து விட்டு, லைட்டைப் போட்டான்.
அவள் சோபாவில் சுருண்டு படுத்திருந்தாள்.
கௌசிக் அவள் பக்கத்தில் போய், “ஓய்… என்ன படுத்திருக்கே?” என்றான் சத்தமாக.
அவன் போட்ட சத்தத்தில் அவள் பயந்து எழுந்திருக்கிறேன் என்று கீழே விழுந்தாள்.
அவனைப் பார்த்த அவள் இரண்டடி பின்னால் நகர்ந்தாள். அவளை அவன் நெருங்கினான். அவள் அன்று போட்டிருந்த சேலையில் குங்குமம் கலந்த மஞ்சளில், வயலட் பூ தெளித்தாற் போல், இடையில் ஜிமிக்கி வேலை எம்பிராய்டு என்று கண்ணைப் பறித்தன.
அவளின் அழகு, இன்னும் மெருகூட்டியது. அவள் பக்கத்தில் போய் அவள் கன்னத்தைத் தொட்டான்.
அவள் அலறினாள். “என்னைத் தொடாதீங்க… நீங்க மனிதன்தானா? உங்களுக்கு ரோசம் இல்லை. இப்படி விரும்பாத பெண்ணிடம் தான் உங்க வீரத்தைக் காட்டுவதா?”
“நீ விரும்பினா என்ன, விரும்பாட்டி என்ன! எனக்குத் தேவை உன் அழகு, இந்த உடம்பு, எப்படிடி இத்தனை அழகையும் நீ வழிச்சு வந்திருக்கே… நான் பார்த்த பெண்களிலேயே… உன்னை மாதிரி அழகு, உடம்பு, மென்மை எல்லாம் பார்த்ததில்லை…”
அவள் அவன் முகத்தில் காறித் துப்பினாள். “உன் தங்கையை இப்படி ஒருத்தன் வர்ணித்தால் எப்படி இருக்கும் உனக்கு. நான் மட்டும் என்ன உன் தங்கை போலத்தானே… என்னை விட்டுவிடு,” என்றாள்.
அவனுக்குத் தங்கை என்றதும், ஒரு வெறி வந்தது. “என்னடி காறித் துப்புறே…? என்னிடம் எத்தனை பேர் ஓடி வருவாங்க தெரியுமா? ஏன் நேற்று நான் உன்னை சந்தோசப்படுத்தவில்லை? அது போதாதா உனக்கு? இன்றும் வேண்டுமா…? நீ தாங்க மாட்டே என்றுதான்… உன்னிடம் மென்மையாக நடந்து கொண்டேன்…”
“அது உனக்குப் பிடிக்கவில்லையா… என் தங்கை என்றா சொன்னே… இனி சொல்வாயா? என் தங்கை என்று…” அவள் கழுத்தைப் பிடித்து நெரித்தான்.
அவளுக்கு மூச்சுத் திணறியது. அவள் கைகளால் அவன் கையைப் பிடித்துத் தடுத்தாள். அவன் பிடி இரும்பாக இருந்தது. அவளால் தாங்க முடியவில்லை. அவனை அப்படியே கட்டிக் கொண்டு அவன் மேல் சாய்ந்தாள்.
Reviews
There are no reviews yet.