அறிமுகம்
பா. இளங்கோவன் என்ற இயற்பெயர் கொண்ட இளங்கோ கிருஷ்ணன் (பிறப்பு: 15 மார்ச் 1979) ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளர், கவிஞர், மற்றும் திரைப்படப் பாடலாசிரியர் ஆவார். இலக்கியம், இதழியல், திரைப்படம் என மூன்று வெளிகளில் இயங்கிக்கொண்டிருப்பவர். குறிப்பாக இலக்கியத்தில் கவிதை, சிறுகதை, நுண்கதை என்ற படைப்பாக்க வடிவங்களிலும் விமர்சனத்திலும் இயங்கிவருபவர்.இயக்குநர்
மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் 1 (2022) திரைப்படத்தில் பாடலாசிரியாகப் பணியாற்றியுள்ளார். இரண்டு பாகங்களாக வெளிவரும் இப்படத்தில் 10 பாடல்கள் எழுதியுள்ளார்.
விருதுகள்
- தேவமகள் அறக்கட்டளை விருது (2007)
- சென்னை இலக்கிய விருது (2015)
- வாசக சாலை இலக்கிய விருது (2021)