Description

திராவிட இயக்க ஆணிவேராகப் பக்கக் கிளை வேராகத் தலைவர்கள் பலர் பணியாற்றியுள்ளனர். அவர்களை நினைவூட்டியும் இலக்கிய வரலாற்றில் பதிவு செய்தும் உள்ளனர் என்றாலும் 21ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் திராவிட இயக்கத்தின் செயல் தலைவராம் பெரியாராய், அண்ணாவாய் வாழ்ந்த முத்தமிழ் அறிஞர் இலக்கிய உலகின் முடிசூடா மன்னர், அரசியல் மூதறிஞரான கலைஞர்க்கு இலக்கிய உலகம் காணிக்கை செலுத்தும் வகையில் வல்லம் அடைக்கல மாதா கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் இராம. சிதம்பரம் அவர்கள் ‘கலைஞர் பிள்ளைத்தமிழ்’ என்னும் நூலைப் படைத்தளித்துள்ளார். அன்னாரைத் தமிழுலகம் வாழ்த்தி ஆதரிக்கும் என வாழ்த்துகின்றேன்.

க. பொன்முடி
உயர்கல்வித்துறை அமைச்சர், தமிழ்நாடு

Reviews

There are no reviews yet.


Be the first to review “கலைஞர் பிள்ளைத்தமிழ்”

Related Products