Description

19ஆம் நூற்றாண்டில் தமிழகத்திலிருந்து இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதிகளுக்கு ‘கூலி’களாகக் கொண்டுசெல்லப்பட்ட இந்திய வம்சாவளித் தமிழர்களின் மத்தியில் எழுந்த முதல் எழுத்து முயற்சிகளை இந்நூல் பதிவுசெய்கிறது.

நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் மலையகத் தமிழர்கள்மீது இடம்பெற்ற கொடூர துரைத்தன அடக்குமுறையையும், ஆங்கிலத் துரைமார் தமிழ் பேச உபயோகித்த ’கூலித் தமிழ்’ போதினிகளில் இந்த அடக்குமுறை எவ்வாறு வெளிப்பட்டது என்பதையும் ஆராயும் கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

இந்திய வம்சாவளித் தமிழர்கள் மோசமாக நடத்தப்படுவதற்கு எதிராகக் கருமுத்து தியாகராசர் எழுப்பிய கண்டனங்கள் முதல்முறையாக இந்நூலில் பதிவுபெறுகின்றன.

மலையகத்தில் எழுந்த முதல் இரண்டு நாவல்கள் பற்றிய ஆய்வுகள் மலையக இலக்கியத்திற்கு வளம் சேர்ப்பவை.

அஞ்சுகம் என்ற கணிகையர் குலப் பெண் ஆளுமையை மலையகத்தின் முதல் பெண் புலமையாளராக இந்நூல் அடையாளப்படுத்துகிறது.

ஐரோப்பிய நூலகங்களில் மேற்கொள்ளப்பட்ட விரிவான தேடல்கள் இந்நூல் ஆய்வுக்குப் பலம் சேர்த்துள்ளன.

Reviews

There are no reviews yet.


Be the first to review “கூலித் தமிழ்”

Related Products