Description

இன்றைய வாழ்க்கை நிகழ்வுகளைத் தமிழ் இலக்கியம் கூறும் தொன்மையான நிகழ்வுகளுடன் இணைக்கும் வாழ்வியல் கட்டுரைகளின் தொகுப்பே மெய்ப்பாடுகள். இரா. திருப்பதி வெங்கடசாமி “உள்ளத்து உணர்ச்சிகளை உடல்மொழி வழியாக வெளிப்படுத்துவதே மெய்ப்பாடு எனத் தொல்காப்பியர் எழுதிய இலக்கணத்தைத் தன் வாழ்க்கை அனுபவங்களின் மூலம் மிகவும் சிறப்பாக விளக்கியுள்ளார் ஆசிரியர். அந்த உணர்ச்சிகளை விளக்குவதற்கு சாங்க காலப் பாடல்களிலிருந்து எடுத்துக்காட்டுகளை வழங்கியுள்ளார். இந்நூலாசிரியர் 20ம் நூற்றாண்டில் தன் வாழ்க்கையில் ஏற்பட்ட உணர்ச்சிமயமான அனுபவங்களை கி.மு.முதலாம் நூற்றாண்டின் தொல்காப்பியர் கூறும் மெய்ப்பாடுகளுடன் இணைக்கிறார். இவர் பதிவு செய்துள்ள இன்றைய வாழ்க்கையும் சாங்ககால வாழ்க்கையும் பல இடங்களில் ஒத்துப் போகின்றன. அது தமிழர் வாழ்வின் தொடர்ச்சியும் பண்பாடும் நிலைத்து நிற்பதைக் கண்கூடாகக் காட்டுகின்றது. இந்நூலை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் அவர்களின் இளமைக்காலம் மீள்நினைவாக வருவது உறுதி. வாழ்வியல் அனுபவங்கள். இலக்கிய மேற்கோள்கள், கிராமச் சூழல்கள். உலகப் பயண அனுபவங்கள். சமூகம் சார்ந்த அறக் கருத்துகள். நகைச்சுவை என எல்லாவற்றையும் உள்ளடக்கிய முழுமையான நூல், இந்த மெய்ப்பாடுகள். இந்நூல் வாசிப்பு அனுபவத்தை முழுமையாக வழங்கும் என்பது உறுதி.” இரா. செல்வம் இஆப “பனையடி’ நூலாசிரியர்

Reviews

There are no reviews yet.


Be the first to review “மெய்ப்பாடுகள்”

Related Products